டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.
19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர்.
மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது.
இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இக்கிராமத்து மாணவர்கள் 42பேருக்கும் டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பானது 107515.00ரூபா (ஒரு லட்சத்து ஏழாயிரத்து ஐநூற்று பதினைந்து ரூபா) நிதியுதவியை வழங்கியிருந்தது. 42பிள்ளைகளுக்கும் புது ஆடைகள் , 2014ம் ஆண்டுக்கான கற்றல் உபகரணங்கள் , புத்தகப்பைகள் யாவும் அன்னை அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளது.
இத்தோடு எமது அமைப்பின் பணியாளரான தினேஷ் அவர்களது சட்டத்துறைக்கற்றலுக்கான 3வருடங்களுக்கான உதவியினையும் அன்னை அறக்கட்டளை அமைப்பு வழங்க முன்வந்து முதற்கட்ட ஆதரவாக 15ஆயிரம் ரூபாவினை தினேஷின் கல்விக்கு வழங்கியுள்ளார்கள்.
மேலும் 10ஆயிரம் மாணவர்களுக்கான இவ்வருடத்திற்கான புலமைப்பரிசில் வழிகாட்டி வினாவிடை மாதிரி பரீட்சை அச்சடிப்பதற்குத் தேவையான நிதியினையும் வழங்க முன்வந்துள்ளனர்.
தாயக மக்களுக்கான பணிகளோடு எம்மோடு துணைநிற்கும் அன்னை அறக்கட்டளை அமைப்பின் ஆதரவுக்கு தங்கள் நிதியுதவியை டென்மார்க் holstebro ,viborg ,herning நகரங்களைச் சேர்ந்த குடும்பங்கள் வழங்கியுள்ளனர்.
நிதியுதவி வழங்கியவர்கள் விரபங்கள் :-
1) செல்வன் 500குறோணர்.
2) தேவராஜா 200குறோணர்.
3) மலீனா 500 குறோணர்.
4) ரதீஸ் 200 குறோணர்.
5) கேமா 200 குறோணர்.
6) தர்மலிங்கம் 300குறோணர்.
7) சிவலிங்கம் 300 குறோணர்.
8) பாஸ்கரன் 300 குறோணர்.
9) சயிந் 300 குறோணர் (viborg )
10) நந்தகுமார் 200 குறோணர்.
11) தெய்வன் 200 குறோணர்.
12) ரத்தினவேல் 200 குறோணர்.
13) ஈசன் கேணிங் 300 குறோணர்.
14) ராமலிங்கம் 200 குறோணர்.
15) ஆனந்தராஜா 200 குறோணர்.
16) கீதா 200 குறோணர்.
17( கென்றி யூட்சன் 200 குறோணர்.
18) திவாகர் 300 குறோணர். இவர்களோடு கடந்தகால தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் கருணாகரனிடமிருந்து 1715 குறோணர்களும் அன்னை அறக்கட்டளை அமைப்பிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
ஏழைமாணவர்கள் கல்விக்கு உதவ முன்வந்துள்ள அன்னை அறக்கட்டளை அமைப்பிற்கும் உதவிய டென்மார்க் உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சு நிறைந்த நன்றிகள்.